இந்த 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (23-11-2023) முதல் அடுத்த 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம்
மேலும், தமிழகத்தில் நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.