கனமழையால் வீடு இடிந்து விழுந்து தந்தை, மகள் சம்பவ இடத்தில் துடிதுடித்து பலி - சோகத்தில் மூழ்கிய கிராமம்
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அரியலுார், கடலுார் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அரியலுார், கடலுார் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் நேற்று கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக, வாகைக்குளம், வடக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்று இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் தூங்கிகொண்டிருந்த தந்தை மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிழிந்தனர். வீடு இடிந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினரும் இடுபாடுகளில் சிக்கிக்கொண்ட தந்தை மற்றும் மகள் ஆகியோரை சடலமாக மீட்டனர்.
இடுபாடுகளில் தாய் வேலம்மாளை உயிருடன் மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் வேலம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.