கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...!
By Thahir
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.