அடுத்த 3 மணி நேரத்திற்கு கொட்டி தீர்க்கபோகும் கனமழை - வானிலை ஆய்வு மையம்

Chennai
By Thahir Nov 01, 2022 06:10 AM GMT
Report

அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Heavy rain for next 3 hours

விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடலுார், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கரூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.