தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் இவைதான் : வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் நாளை முதல் ஐந்து நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடரும் பருவ மழை
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் தமிழகத்ஹ்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் . நாளை முதல் ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனேக இடங்களில் மிதமான மழை மற்றும் கனமழை பெய்யும். சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது .
ஐந்து மாவட்டங்களில் கன மழை
குறிப்பாக தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ,திருவாரூர், விழுப்புரம் ,கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை திருவள்ளூர், சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும். புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.