தொடர் கனமழையால் 10 மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

College School Heavy Leave Rain
By Thahir Nov 25, 2021 02:26 PM GMT
Report

தொடர் கனமழையால் 10 மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை(நவ.26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. மேலும் 4 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலைமுதல் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்திருந்த நிலையில்,

தற்போது மழையின் தீவிரத்தால் நாளை(நவ.26) திருநெல்வேலி , தூத்துக்குடி , புதுக்கோட்டை , விருதுநகர் , திண்டுக்கல் , அரியலூர் , தேனி, தென்காசி , பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளிகள் , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

மேலும் மதுரை , ராமநாதபுரம் , திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.