கன மழை எதிரொலி: சென்னையில் 2 சுரங்க பாதைகள் மூடல்
Chennai
By Thahir
கனமழை காரணமாக சூரப்பட்டு விநாயகபுரம் சுரங்கப்பாதை மற்றும் , கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளன.
மிரட்டும் கனமழை
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி வருகிறது. அதனை வெளியேற்றும் பணிகள் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதில் சென்னை சூரப்பட்டு விநாயகபுரம் சுரங்கப்பாதை மற்றும் , கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை ஆகியவை மழைநீர் தேங்கியதால் மூடப்பட்டுள்ளன.
சூரபட்டு சுரங்கப்பாதையில் செல்வதற்கு பதிலாக 100அடி சாலையில் செல்லவும், கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் செல்பவர்கள் அதன் மேம்பாலம் வழியாகவும் செல்ல போக்குவரத்து துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.