நாளை 8 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Heavy Rain Tamilnadu
By Thahir Nov 10, 2021 03:55 PM GMT
Report

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை 6 மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற  இருப்பதாகவும்,

இதன் காரணமாக தமிழகத்தில் நாளையும்  8 மாவட்டங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 

மேலும், வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை 6 மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கக்கூடும்.

இதன் காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்,

ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், காஞ்சீபுரம், விழுப்புரம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும்,

செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.