உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு!!

chennai heavy rain tn
By Anupriyamkumaresan Jun 11, 2021 05:09 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.

நேற்று முதல் 12ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியது.

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு!! | Heavy Rain Chennai Meteorological Report

இந்நிலையில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து ஒடிசா அருகே கரையை கடக்கும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கத்தால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் வெப்ப சலனம் மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு!! | Heavy Rain Chennai Meteorological Report

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது