அதிமுக ஆட்சியே பரவாயில்ல..வடியாத வெள்ளத்தால் குமுறும் மக்கள்
சென்னையில் மழை ஓய்ந்த பிறகும் ஒரு வாரத்திற்கும் மேலாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் புளியந்தோப்பு பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகளவிலான மழை பொழிவை கொடுத்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் பெய்த தொடர் கன மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.
இதனால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில புளியந்தோப்பு குடியிருப்பு பகுதியில் கடந்த 6 நாட்களும் மேலாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஜபிசி தமிழுக்கு பேட்டியளித்த அப்பகுதி மக்கள் வெள்ள நீருடன் சேர்ந்து கழிவு நீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும் கடந்த சில நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறும் அவர்கள் தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த பகுதியை அமைச்சர்களோ அதிகாரிகளோ பார்வையிடவில்லை,இதற்கு அதிமுக ஆட்சியே பரவாயில்லை என்று வேதனை தெரிவித்துள்ளன.