சென்னையில் கொட்டிய கனமழை…விமான சேவை பாதிப்பு
Chennai
By Thahir
சென்னையில் காலை முதலே வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
கொட்டிய கனமழை - விமான சேவை பாதிப்பு
இந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா சாலை, கிண்டி, கோடம்பாக்கம், விருகம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை செய்தது.
சுமார் ஒரு மணி நேரம் பெய்த கன மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. சென்னையில் மதியம் பெய்த கனமழையால் 10க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.
விசாகப்பட்டிணத்திலிருந்து வந்த விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திரும்பிச் சென்றது.
கொச்சி, மதுரையில் இருந்து வந்த விமானங்கள் தாமதமாக தரையிறங்கின.