உருவான சக்கரம் .. தமிழகத்தை மிரட்டப்போகும் புயல் : எச்சரிக்கும் வெதர்மேன்

By Irumporai Dec 04, 2022 07:23 AM GMT
Report

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பதை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன்

தமிழ்நாடு வெதர்மேன் வானிலை குறித்த தகவல்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருவார், இந்த நிலையில் வரும் காலங்களில் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் வர வாய்ப்பு உள்ளதாக பிரதிப்ஜான் தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் :

சக்கரம் இன்று உருவாகிறது.. இப்போது ஆரம்ப நிலையில் இருக்கும் இது தாய்லாந்து வளைகுடாவில் இருந்து அந்தமான் கடலுக்குள் நகரும். 4 நாட்களில் அதாவது 8ஆம் தேதி இது தமிழக கடற்கரையை நெருங்கும்.

உருவான சக்கரம் .. தமிழகத்தை மிரட்டப்போகும் புயல் : எச்சரிக்கும் வெதர்மேன் | Heavy Rain As Explains Tamilnadu Weatherman

மகாபலிபுரம் முதல் காரைக்கால் வரை தற்போது கனமழை இருக்கும்.. பாண்டிச்சேரி முதல் கடலூரில் நல்ல மழை பெய்யும். இப்போது நிலவும் போக்குகள் வைத்துப் பார்க்கும் போது.. நமது கடலில் உள்ள கிங்மேக்கர் Madden-Julian Oscillationஐ தீவிரப்படுத்தச் சூடான கடல் உதவுகின்றன.

புயலுக்கு வாய்ப்பு

இது இந்த வடகிழக்கு பருவமழை காலத்தின் முதல் புயலாக மாற அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் வறண்ட காற்றின் காரணமாக இது கரையை நெருங்கி வலுவிழக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வட தமிழகம் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது.

சென்னையில் கடந்த 30 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசியுள்ளது. 1994 அக்டோபர் புயல் சமயத்திலும் 2016 வர்தா காலகட்டத்திலும் அந்த வேகத்தில் காற்று வீசியது. உடனே எதையும் கற்னை செய்து கொள்ள வேண்டாம்.

உருவான சக்கரம் .. தமிழகத்தை மிரட்டப்போகும் புயல் : எச்சரிக்கும் வெதர்மேன் | Heavy Rain As Explains Tamilnadu Weatherman

வரவிருக்கும் சக்கரம் 100 கிமீ வேகத்தில் காற்று வீசும். இவை புள்ளிவிவரங்கள் மட்டுமே" என்று பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதைப் போல இது புயலாக மாறினால், வடதமிழக பகுதிகளில் இந்த பருவமழை காலத்தில் கடைசியாக நல்ல மழை கிடைக்க உள்ளது.என கூறியுள்ளார்.