புயல் எதிரொலி: வேலூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Tamil nadu TN Weather Weather
By Sumathi Dec 08, 2022 06:14 AM GMT
Report

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை எச்சரிக்கை

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து வேலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று மதியம், நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புயல் எதிரொலி: வேலூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! | Heavy Rain Alert Vellore School College Leave

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனை தொடர்ந்து மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் படிப்படியாக நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,

இன்று புயலாக வலுப்பெறக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.