அடுத்த 3 மணிநேரம்.. இந்த 31 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!

Tamil nadu Regional Meteorological Centre
By Vinothini Nov 22, 2023 01:00 PM GMT
Report

கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை மையம்

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரளப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

heavy rain

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக் கூடும். இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, கடலூர் ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை , அரியலூர் ,பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல் ,சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை , நெல்லை, ராமநாதபுரம்,தூத்துக்குடி, விருதுநகர் ,

கார்த்திகை தீபத் திருவிழா.. 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அரசு அறிவிப்பு!

கார்த்திகை தீபத் திருவிழா.. 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அரசு அறிவிப்பு!

தேனி ,திண்டுக்கல், கோவை, தென்காசி , திருப்பூர் , நீலகிரி , கன்னியாகுமரி , ஆகிய 31 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.