மிரட்டப்போகும் கனமழை - உருவாகிறது புதிய புயல்..!

Chennai TN Weather Regional Meteorological Centre Weather
By Thahir May 03, 2023 01:37 PM GMT
Report

வங்கக்கடலில் உருவாக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு - மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதனால் மே 2, 3ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 4, 5-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy Rain Alert- A new storm is forming

இதனிடையே வங்கக்கடலில் வரும் 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்து இருந்தார்.

இந்திய வானிலை மையம் எச்சரிக்கை 

இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Heavy Rain Alert- A new storm is forming

இது வரும் 8ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின் புயலாக வலுப்பெறவும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.