வருகிறது புயல் : டிச.8-ஆம் தேதி ரெட் அலர்ட்
வங்கக் கடலில் புயல் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 8-ஆ தேதி அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பருவ மழை
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
ரெட் அலர்ட்
குறைந்த காற்றழுத்தல் தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு பெய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் 7-ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே குறைந்த காற்றழுத்தல் தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு பெய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் 7-ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.