அடித்து வெளுக்கப்போகும் கனமழை; எங்கெல்லாம் பாருங்க.. கவனம்!
11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்குள் நுழைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

இது வரும் நாளை மறுநாள் புயலாக வலுப்பெறும் என குறிப்பிட்டுள்ள வானிலை மையம், இந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ள, சிங்கம் என பொருள்படும் 'சென்யார்' என பெயரிடப்படும் என குறிப்பிட்டுள்ளது.
இதனால் குமரிக்கடல் பகுதியில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
எங்கெல்லாம்.,
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை என டெல்டா மாவட்டங்களில் இன்றும் கனமழை நீடிக்கும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வெயில் குறைவாகவே இருக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.