தொடர் மழையால் ஜெர்மனியில் ஓடும் வெள்ளம்: 6 பேர் உயிரிழப்பு

ஜெர்மனி Heavy flood
By Petchi Avudaiappan Jul 15, 2021 04:16 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஜெர்மனியில் தொடர் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்றிரவு அங்குள்ள அஹர் நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 6 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் பல வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேரும்,மீட்பு பணியின்போது 2 தீயணைப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 30 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.