நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெளியூரில் வேலை பார்ப்பவர்களுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெளியூரில் வேலை பார்ப்பவர்களுக்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (பிப்ரவரி 19) ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த 20 நாட்களாக அரசியல் கட்சியினர் செய்து வந்த தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மதிப்புமிக்க உள்ளாட்சி தேர்தல் நகரத்தில் வேலைப் பார்ப்பவர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பாக அமைந்துள்ளது.
காரணம் வேட்பாளர்கள் அனைவரும் நன்கு பழக்கமானவர்கள் என்பதால் தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே வேட்பாளர்களின் உறவினர்கள் உட்பட அனைவரும் வாக்களிக்க ஊருக்கு வாங்க என அன்போடு அழைத்து பயண செலவுகள் உட்பட அனைத்து சலுகைகளையும் அளிப்பதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு ஓட்டும் வெற்றிக்கு மிக முக்கியம் என்பதால் வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் உள்ளூர் வேட்பாளர்கள் மத்தியில் தனி முக்கியத்துவம் பெற்று வருகின்றனர்.