பக்ரீத்: சென்னையில் ரயில்களில் அலைமோதும் கூட்டம் - பயணிகள் கடும் அவதி
சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களில் கூட்டம் அலைமோதுவதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
பக்ரீத் பண்டிகை
நாளை தியாக திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பண்டிகையை கொண்டாட மக்கள் தங்களது சொந்த ஊர்களை நோக்கி புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மதியம் சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை செல்லும் வைகை அதிவிரைவு வண்டியில் (12635) பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதை தொடர்ந்து மதியம் 3.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி வரை செல்லும்
அலைமோதும் கூட்டம்
பல்லவன் விரைவு ரயிலில் (12605) முன்பதிவு செய்த பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறியதால் முன்பதிவு செய்த பயணிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் டிக்கெட் பரிசோதகர் பயணிகளை அப்புறப்படுத்த முயன்றார் ஆனால் கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டத்தால் அவர் திரும்பி சென்றார்.
முன்பதிவு பெட்டிகளில் மற்ற பயணிகள் ஏறியதால் கூட்ட நெரிசலால் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
இது போன்ற பண்டிகை நேரங்களில் ரயில்வே நிர்வாகம் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.