அரசு மருத்துவமனையில் அலைமோதிய கூட்டம்: கொரோனா பரவும் அபாயம்
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணி செய்ய ஆட்கள் தேர்வுக்கு அலைமோதும் கூட்டம் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவ கல்லூரி முதல்வர் மூலம் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் மருத்துவர்கள் 42 பேர், செவிலியர்கள் 60 பேர், உதவியாளர்கள் மருத்துவ பணியாளர்கள் காவலர்கள் உள்ளிட்ட 156 பேர் என மொத்தம் 265 பேர் இன்று தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ஒரு பகுதியில் நேர்முகத் தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்வில் கலந்து கொள்ள ஆண்கள், பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
அவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் சமூக இடைவெளியின்றி கும்பல் கும்பலாக இருந்தனர்.
இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.