பழநி மலை அடிவாரத்தில் பக்தர்களிடையே கடும் மோதல்

Tamil nadu Tamil Nadu Police
By Thahir Feb 09, 2023 02:02 AM GMT
Report

பழநி அடிவாரம் திருஆவினன் குடியில் கோவை, எடப்பாடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களுக்கு இடையேயான மோதலால் பதற்றம் நிலவியது.

தை பூசத்திருவிழா

பழநி தை பூசத்திருவிழா ஜன.29-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பி வருகின்றனர்.

பத்து நாள் விழா நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், கோவை, எடப்பாடி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் நேற்று பழநி வந்தனர்.

இரு தரப்பு பக்தர்களிடையே மோதல் 

பழநி அடிவாரம் திரு ஆவினன்குடி பகுதியில் தப்பு அடித்துக்கொண்டு ஆடிப்பாடி வந்த பக்தர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

Heavy conflict between Palani devotees

இதில் கோவை, எடப்பாடியைச் சேர்ந்த பக்தர்கள் மோதிக்கொண்டனர். கல், கட்டைகளை எடுத்து கோயிலுக்குள் வீசினர். இதில் சுவாமி பட கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் சேதமாகின.

அங்கு பதற்றம் நிலவியதால் போலீஸார் குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக கோயில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.