இஸ்லாமிய கைதிகள் விடுதலை தீர்மானம்!! முதல்வர் vs எதிர்க்கட்சி தலைவர்!! காரசார விவாதம்!!
இஸ்லாமிய கைதிகள் விடுதலை தீர்மானத்தில் பேச வாய்பளிக்காததால் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் அவையில் இருந்து வெளியேறியுள்ளார்.
சிறப்பு தீர்மானம்
இன்று கூடிய தமிழக சட்டமன்றத்தில் நீண்ட நாட்களாக சிறையில் சிக்கி தவிக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்கும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அப்போது பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின், இஸ்லாமிய மக்கள் மீது திடீர் பாசம் ஏன்? என வினவி, இது தொடர்பான மசோதா ஆளுநரிடம் அளிக்கப்பட்டுள்ளது அவரின் ஒப்புதலுக்காக காத்துள்ளது என தெரிவித்து, ஆளுநரை சந்தித்து அதிமுகவினர் அழுத்தம் தந்திருக்கலாமே என்றார்.
அப்போது பதிலளித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமிய சமூகத்தினர் மட்டுமின்றி நீண்ட நாட்களாக அனைத்து சமூகத்தினரை விடுதலை செய்யவும் அதிமுக முயற்சிக்கும் என கூறினார். மேலும், பாபர் மசூதி இடிப்பின் போது, தமிழகம் அமைதி பூங்காவாக திகழ அதிமுக தான் காரணம் என கூறினார்.
இந்த விவாதத்தின் போது, தங்களுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.