தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும்- சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் வெப்ப நிலை இயல்பை விட அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள், ராமநாதபுரம், காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும்.
அதேநேரம் உள்தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு படிப்படியாக உயரக்கூடும்.

மேலும், அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசவுகரியமான சூழல் ஏற்படலாம்.
சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலையில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும்.
சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் நிலவும் என்பதால் அசௌகரியமாக இருக்கலாம் என வானிலை மையம் கணித்துள்ளது.
700 மில்லியன் டொலரை வெளிநாடுகளுக்கு கடத்திய இலங்கையில் முன்னணி வர்த்தக நிறுவனம்! சி.ஐ.டி விசாரணையில் அம்பலம் IBC Tamil