மக்களே உஷார்..உக்கிரமாக வெயில்..வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆடி மாதத்திலும் அதிகரிக்கும் வெயில்
கோடை மாதம் முடிந்த பிறகும் தமிழககத்தின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்திடவில்லை. குறிப்பாக தலைநகரான சென்னையின் பல பகுதிகளிலும் வெயில் இன்றும் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது.
இரண்டு நாட்களுக்கு அதிகரிக்கும்
இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்று தற்போது வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயல்பை அடுத்து இரண்டு நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் 2 முதல் 3 செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.