தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம்!

Tamil nadu Chennai TN Weather Weather
By Jiyath Mar 09, 2024 11:38 AM GMT
Report

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 09.03.2024 முதல் 15.03.2024 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம்! | Heat Waves Increased In Tamilnadu Next 3 Days

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.

மேகமூட்டம் 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம்! | Heat Waves Increased In Tamilnadu Next 3 Days

அதேபோல் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது