அடுத்த வாரத்தில் இந்திய மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இந்தியாவில் மே தொடக்கத்திலேயே வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் ஏப்ரல்,மே மாதங்கள் கோடை காலம் என்பதால் வெயில் வாட்டி வதைப்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மாறி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதனிடையே இந்தியாவில் மே தொடக்கத்திலேயே வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் கடந்த மார்ச் மாதம் பதிவாகியுள்ளது. 2022 மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20.24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும் டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, உத்தர பிரதேசம், ஒடிசா ,ஜார்கன்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை வீசும். இதேபோல நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்பதால் மாநிலங்களுடனும், மத்திய அரசின் பேரிடர் மேலாண்மைப் பிரிவினருடனும் இணைந்து செயல்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.