வரலாறு காணாத வெயில்; மயங்கி விழுந்து 19 பேர் பலி - 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!
வெப்ப அலை தாக்கத்தால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெப்ப அலை
இந்தியாவில் கோடை வெயில் வாட்டி வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.
டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 46 டிகிரி செல்சியசை தாண்டி வதைக்கிறது. வெகுவாக வெப்பக் காற்றும் வீசுகிறது. எனவே, பகல் நேரங்களில் மக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
19 பேர் பலி
இதற்கிடையில், பீகாரின் செய்க்புரா என்ற இடத்தில் பள்ளியில் படித்துவந்த மாணவிகள் வெப்ப அலையால் மயக்கம் அடைந்தனர். மேலும், பெகுசாராய் என்ற இடத்திலும் மாணவிகள் மயக்கமடைந்தனர்.
Maximum Temperature reported over Dehri (Bihar) on 30th May 2024#maximumtemperature #dehri #bihar@moesgoi@ndmaindia@DDNational@airnewsalerts@RailMinIndia@DDNewslive@NHAI_Official pic.twitter.com/Me1glPpOh1
— India Meteorological Department (@Indiametdept) May 30, 2024
இந்நிலையில், வெப்ப அலை தாக்கத்தால் 19 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலரும் ஹீட் ஸ்ட்ரோக்கால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதற்கிடையில், ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.