தமிழகத்தில் சதம் அடித்த வெயிலின் தாக்கம்.... எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு?
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சென்றுள்ளது மக்களிடையே கடும் அவதியை ஏற்படுத்தியுள்ளது.
வெயிலின் தாக்கம்
தமிழ்நாட்டில் இன்று பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் நாட்டில் 10 இடங்களில் இவ்வாறு அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னை மீனம்பாக்கத்தில் 104.18 டிகிரியும், கரூர் பரமத்தியில் 103.64 டிகிரியும், தஞ்சையில் 102.2 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 101.66 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது.
அதுமட்டுமின்றி திருச்சி, திருத்தணி, பாளையங்கோட்டையில் தலா 101.3 டிகிரியும், நாமக்கல்லில் 100.94 டிகிரியும், மதுரை விமான நிலையத்தில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே வெப்பநிலை அதிகமாக இருப்பதால் ஜுன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போதும் இவ்வாறு வெப்பம் அதிகமாக உள்ளதால் பள்ளி திறப்பில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.