சென்னையில் வெயில் அதிகரிக்க காரணம் என்ன? - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தை வானிலை மண்டல தலைவர் பாலசந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
அதிகரிக்கும் வெப்பம்
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது , இதற்கான காரணத்தை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார். அதில் , கடலில் கடந்த வாரம் உருவான மோக்கா புயல் கடந்த 13 மற்றும் 14 -ந் தேதிகளில் கரையை கடந்தது, இதனால் சென்னை கடல் பகுதிகளில் அந்த 2 நாட்கள் கடல் காற்று இல்லாமல் போய்விட்டது.
வெப்பம் குறையும்
கடந்த 15-ந் தேதிகடல் காற்று பிற்பகல் 12.45 மணிக்கு தான் சற்று வீசத்தொடங்கியது. இன்று பிற்பகல் 1.15 மணிக்கு பிறகுதான் வீச ஆரம்பித்தது.
இதனால் வெப்பத்தின் தாக்கம் சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் அதிகமாக உணரப்பட்டு இருக்கிறது.
இனி வரக்கூடிய 2 நாட்களுக்கும் இப்படித்தான் இருக்கும். கடல் காற்று ஓரளவுக்கு வீசத்தொடங்கியதும், வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறையும் என விளக்கமளித்துள்ளார்.