மத்திய அரசிற்கு எனது மனமார்ந்த நன்றி : ரஜினிகாந்த்

rajini government modi Dadasaheb
By Jon Apr 01, 2021 11:01 AM GMT
Report

இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே' விருத்துக்கு செய்ய பட்டமைக்கு பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தன்னை விருதுக்கு தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில். எனக்கு தாதா பால்கே விருதுக்கு பரிந்துரைத்த ஜூரி உறுப்பினர்கள் , பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மத்திய அரசிற்கும் எனது மனமார்ந்த நன்றி

மேலும்,என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் சத்யநாராயணா ராவுக்கும் நன்றிஎனவும். எனது குருநாதர் கே.பாலச்சந்தர் அவர்களுக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஊரடங்கள், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்கள், உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு விருதை சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.