மணிப்பூர் வன்முறையால் மனம் உடைந்துள்ளது; நமது கூட்டு மனசாட்சி எங்கே? மு.க.ஸ்டாலின் உருக்கம்!

M K Stalin Tamil nadu DMK Manipur
By Jiyath Jul 20, 2023 08:12 AM GMT
Report

மணிப்பூர் வன்முறையால் மனம் உடைந்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் கலவரம்

மணிப்பூர், பெரும்பான்மையாக இருக்கக்கூடிய `மைதேயி' சமூக மக்கள், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து `குக்கி' பழங்குடியின மக்கள் போராடி வருகின்றனர்.

மணிப்பூர் வன்முறையால் மனம் உடைந்துள்ளது; நமது கூட்டு மனசாட்சி எங்கே? மு.க.ஸ்டாலின் உருக்கம்! | Heartbroken Agonising Violence In Manipur Ibc 90

இதில் ஒருவருக்கொருவர் மோதியதில், கலவரம் நாளுக்கு நாள் பெரும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற இளைஞர்கள் சிலர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் "மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறையால் முற்றிலும் என் மனம் உடைந்து திகைப்படைந்துள்ளது.

நமது கூட்டு மனசாட்சி எங்கே? வெறுப்பும் விஷமும் மனித குலத்தின் ஆன்மாவையே வேரோடு பிடுங்குகிறது. இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நின்று பச்சாதாபமும் மரியாதையும் கொண்ட சமுதாயத்தை வளர்ப்பதற்கு உழைக்க வேண்டும்.

மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.