பன்றியின் இதயம் மனிதர்களுக்கு பொருந்தியது ஏன்? ஆச்சரியத்தை ஏற்படுத்திய சம்பவம்

Surprising Incident heart-pig Why it suited humans
By Nandhini Feb 04, 2022 07:23 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அமெரிக்காவில் கடந்த மாதம் பன்றியின் இதயம் மனிதருக்கு பொருத்தி உயிர் கொடுத்த மருத்துவர்களின் சாதனை பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

மற்ற விலங்குகளின் உறுப்புகளை ஒப்பிடும்போது பன்றியின் உறுப்புகள் மட்டும் மனித உடலுக்கு கச்சிதமாக பொருந்துவது ஏன்? என்பதைப் பற்றி பார்ப்போம்.

இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற மனித உடல் உறுப்புகள் கிடைக்காமல், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மனிதர்கள் இறந்து வருகிறார்கள். இந்நிலையை போக்க விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் ஆய்வு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் அமெரிக்காவில் பன்றியின் இதயம் மனிதருக்கு பொருத்தப்பட்டு அது வெற்றி அடைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான ஆய்வில் இது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள எல்.எம். பல்கலைக்கழகத்தில் இது தொடர்பான ஆய்வு முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.

குரங்கு உள்ளிட்ட மற்ற விலங்குகளை காட்டிலும் பன்றியின் உறுப்புகள் கிட்டத்தட்ட மனிதர்களின் உறுப்புகளை ஒத்திருப்பதால் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பொருத்தமானதாக இருக்கிறது. மாற்று விலங்குகளின் உறுப்புகளை மனித உடல் நிராகரித்துவிடும். எனவே ஜெர்மனி ஆய்வாளர்கள் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகர பன்றிகளை ஆய்வுக்கு பயன்படுத்துகின்றார்கள்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் தொற்றினை உண்டாக்கும் வைரஸ்கள் இவற்றில் இயற்கையாகவே கிடையாது. எனவே, இவற்றின் கருமுட்டையை எடுத்து, மரபணு வரிசையில் பன்றிக்கான மரபணுக்களை நீக்கி மனித மரபணுக்களை புகுத்துகின்றார்கள். பின்னர் பன்றியின் கருப்பையில் இவற்றை செலுத்துகிறார்கள்.

115 நாட்களுக்கு பிறகு பிறக்கும் பன்றி, இயற்கையாகவே மனித உடலில் பொருத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது என்று 20 ஆண்டுகள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் வோல்ஃப்.

இவ்வாறு ஆய்வகத்தில் பிறக்கும் பன்றிகளின் உறுப்புகளை முதலில் குரங்குகளின் உடலில் செலுத்தி சோதனையிட்டு பின்னர் மனிதர்கள் உடலில் செலுத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்த ஆய்வு வெற்றியில் முடியும் பட்சத்தில், உடல் உறுப்புகள் கிடைக்காமல் லட்சக்கணக்கான மனிதர்கள் இறப்பதை தடுக்க முடியும். அதே வேளையில் மனிதர்களுக்காக பன்றிகளை வதைப்பது முறையல்ல என்ற வாதமும் முன் வைக்கப்பட்டு வருகிறது.

பன்றியின் இதயம் மனிதர்களுக்கு பொருந்தியது ஏன்? ஆச்சரியத்தை ஏற்படுத்திய சம்பவம் | Heart Pig Why It Suited Humans Surprising Incident