திடீரென மாரடைப்பு - உயிர் பிரியும் கடைசி நொடியில் 50 உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்...!
உயிர் பிரியும் கடைசி நொடியில் 50 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநரின் தியாகச் சம்பவம் நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
50 உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலிருந்து ஸ்ரீமுஷ்ணம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, பேருந்து ஓட்டுநர் புருஷோத்தமனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
ஆனால், வலியை பொருட்படுத்தாமல் புருஷோத்தமன் பேருந்து நிலையத்தில் பயணிகள் இறங்கும் வரை நெஞ்சு வலியை பொறுத்துக் கொண்டிருந்தார்.
பேருந்து நிலையம் வந்த பிறகு பேருந்தை நிறுத்திய புஷோத்தமன் மயங்கி கீழே விழுந்தார்.
அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.