Tuesday, Jul 22, 2025

ஜிம்'மில் கடுமையாக உடற்பயிற்சி செய்த இளைஞர்... - திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்

Heart Attack
By Nandhini 3 years ago
Report

ஜிம்'மில் கடுமையாக உடற்பயிற்சி செய்த இளைஞர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை, பழங்காநத்தம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கமலேஸ்வரன். இவரது மகன் ஸ்ரீவிஷ்ணு (27). இவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தினமும் இவர் மாடக்குளம் 'பிட்னஸ்' சென்டருக்குச் சென்று உடற்பயிற்சி செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி அன்று இரவு 8:30 மணிக்கு ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே சரிந்தார்.

உடனடியாக அவரை மீட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், ஸ்ரீவிஷ்ணு ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.     

ஜிம்