32 வயது பெண்ணுக்கு 15 வயது சிறுமியின் இதயம் பொறுத்தம் - இறந்தும் 6 பேரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்

Delhi
By Nandhini Aug 24, 2022 11:32 AM GMT
Report

முதன்முறையாக 32 வயது பெண்ணிற்கு 15 வயது சிறுமியின் இதயத்தை மருத்துவர்கள் வெற்றிகரமாக பொறுத்தியுள்ளனர்.

15 சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்

கார் விபத்தில் 15 சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து, அந்த 15 சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் பின், டெல்லியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனையில் முதல் முறையாக 32 வயது பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் 15 வயது சிறுமியின் மாற்று இதயம் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

இதயம் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

அடல் பிகாரி வாய்பாயி மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை சுமார் 6 மணி நேரமாக நடைபெற்றது. இதனையடுத்து, 32 வயது பெண்ணிற்கு மாற்று இதயம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மருத்துவர்கள் நடத்தி முடித்தனர்.

Heart surgery

மருத்துவர்கள் பேட்டி

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், 8 ஆண்டுகளாக 32 வயது பெண் இதயநோயால் பெரும் அவதிப்பட்டு வந்தார். கார் விபத்தில் படுகாயம் அடைந்த 15 சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், அச்சிறுமியின் இதயம் 32 வயது பெண்ணிற்கு பொறுத்தப்பட்டுள்ளது. இனி இப்பெண் நலமுடன் வாழ முடியும். 15 வயது சிறுமியின் உடல் உறுப்புகள், 32 பெண் உட்பட 6 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.