எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணை
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
வேலுமணி மீது வழக்கு
திமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில். இம்மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுக்கின்றது.
டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரும் எஸ்.பி.வேலுமணியின் மனுக்களை இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது . கோவை, சென்னை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு என வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது.

இன்று விசாரணை
நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்ற நீதிபதிகள் இன்று வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தனர்.