''நீங்கள் ஜெயிச்சிட்டீங்க என மக்கள் சொல்வதை கேட்க முடிகிறது '' - ம.நீ. ம. கட்சி தலைவர் கமல்ஹாசன்
ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு கோடிக்கணக்கில் சுருட்டியது போன்று எங்கள் வேட்பாளர்கள் செய்ய மாட்டார்கள் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணாநகர் தொகுதிக்கு உட்பட்ட அரும்பாக்கம் மார்க்கெட் பகுதியில் திறந்த வேனில் நின்றபடி தனது கட்சி வேட்பாளர் பொன்ராஜை ஆதரித்து இன்று காலை பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய கமல்ஹாசன் ,எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தேவையான அளவுக்கு ஊதியத்தை எடுத்துக்கொண்டு மீதியை மக்களுக்கே கொடுத்து விடுவார்கள்.
' 'ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு கோடிக்கணக்கில் சுருட்டியது போன்று எங்கள் வேட்பாளர்கள் செய்ய மாட்டார்கள் '' இனி அது போன்று நடக்காது என கூறிய கமல்ஹாசன்.
இப்போதே பல இடங்களில், நீங்கள் ஜெயிச்சிட்டீங்க என மக்கள் சொல்வதை எங்களால் கேட்க முடிகிறது. அந்த குரல் பெருக வேண்டும் என கூறினார்.