ஆரஞ்சுப்பழ தோலில் இத்தனை நன்மைகளா?- பளப்பளப்பான சருமத்திற்கு இதைமட்டும் செய்தாலே போதும்

skincaretips orangepeelbenefits glowingskintips orangeforskin
By Swetha Subash Mar 25, 2022 01:34 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அழகு
Report

வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் உள்ளதால், தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு சாறு உட்கொள்வது நமது உடலுக்கு நல்லது.

உடல் ஆரோக்கியம் தவிர்த்து பல அழகு நன்மைகளையும் ஆரஞ்சு தோல் கொண்டுள்ளது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் C மற்றும் ஆண்டிஆக்ஸைட் அதிகளவு உள்ளதால் அதன் தோலை முக அழகிற்கு பயன்படுத்தும் போது சருமம் பொலிவுடனும், வெண்மையாகவும் காணப்படும்.

ஆரஞ்சுப்பழ தோலில் இத்தனை நன்மைகளா?- பளப்பளப்பான சருமத்திற்கு இதைமட்டும் செய்தாலே போதும் | Healthy Skin Care Benefits In Orange Peel

முதலில் ஆரஞ்சு பழத்தோலின் நன்மைகளை வரிசையாக பார்ப்போம்:

-சருமத்தில் இருக்கும் கொலாஜென் சேதம் அடைவதிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

-வறண்ட, செதில்களாக மற்றும் அரிக்கும் தோலை குணப்படுத்துகிறது.

-சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.

-தோல் செல்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுத்து இளமை மற்றும் ஒளிரும் சருமம் பெற உதவுகிறது.

-தேய்ந்து போன செல்களை புதுப்பிக்க உதவுகிறது.

-சருமத்தை ஒளிரச் செய்யும் பொருளாக செயல்படுகிறது.

-வெயில் பட்டு சருமத்தில் ஏற்படும் டேனை (tan) நீக்குகிறது.

-ஸ்கின் ஏஜிங்க்-ஐ தடுக்கும் பண்புகள் நிறைந்தது.

-ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான தோலை ஊக்குவிக்கிறது.

ஆரஞ்சுப்பழ தோலில் இத்தனை நன்மைகளா?- பளப்பளப்பான சருமத்திற்கு இதைமட்டும் செய்தாலே போதும் | Healthy Skin Care Benefits In Orange Peel

எனவே நீங்கள் உண்ணும் ஆரஞ்சு பழத்தோலை இனி தூக்கி எரியாமல் வெயிலில் நன்றாக காயவைத்து, பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து பின்பு பாதாம் பருப்பையும் நன்றாக அரைத்து பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.

இரண்டையும் ஒன்றாக கலந்து அதனுடன் இரண்டு ஸ்பூன் பசும்பால் சேர்த்து நன்றாக கலந்து இந்த கலவையை முகத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை முகத்தில் வைத்திருங்கள்.

பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ, சருமம் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும், வெண்மையாவும் ஜொலிக்கும்.