3 வேளை உணவை விட இது ரொம்ப முக்கியம் - முக்கிய தகவல்
உணவில் மூன்றில் ஒரு பங்கு நார்ச்சத்து நிறைந்த மாவுச்சத்துகளாக இருக்க வேண்டும்.
உடல் ஆரோக்கியம்
இவை குறைந்த கலோரியைக் கொண்டவை. தினமும் குறைந்தது ஐந்து வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

மீனை, வாரத்திற்கு இரு முறையாவது உணவில் சேருங்கள். எண்ணெய் மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்புகள் இதயத்திற்கு நல்லது. பெரியவர்கள் ஒரு நாளைக்கு 6 கிராமுக்கு மேல் உப்பு சாப்பிடக்கூடாது.
உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க போதுமான தண்ணீர் குடிக்கவும். உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க, காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
வழக்கமான உடற்பயிற்சியை கடைப்பிடிப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்திற்கு மூன்று வேளை உணவை விட, அதில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவு மிக முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.