இனிமேல் ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்க அவசியம் இல்லை - மா.சுப்பிரமணியன்
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இனி சிகிச்சைக்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டவர் 3,7வது தளத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 136 படுக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை, 1522 ஆக்சிஜன் கூடிய படுக்கைகள் இருந்து வந்த நிலையில் தற்போது சாதாரண படுக்கைகளும் சேர்த்து மொத்தமாக 2050 படுக்கைகள் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இனிமேல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வாகனங்களிலே சிகிச்சைக்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் வராது எனவும் தெரிவித்துள்ளார்