கோடைகாலத்தில் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டுமா? - இதை ட்ரை பண்ணுங்க..
healthwaystorefreshness
summertips
refreshtips
By Petchi Avudaiappan
3 years ago

Petchi Avudaiappan
in ஆரோக்கியம்
Report
Report this article
பொதுவாக இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்கள் வெயில் சுட்டெரிக்கும் காலங்களாகும். இந்த காலக்கட்டத்தில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதுடன் வெயிற்கால நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனாலும் நம் அன்றாட பணிகளை மேற்கொள்ள புத்துணர்ச்சியாக இருக்கவே அனைவரும் விரும்புகின்றனர். அந்த வகையில் எளிய முறையின் மூலம் அதனை நாம் மேற்கொள்ளலாம்.
- முதலாவது வெயில் காலத்தில் நாம் என்ன மாதிரியான ஆடைகளை தேர்வு செய்கிறோம் என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும். நல்ல அடர்த்தியான கலர் கொண்ட ஆடைகள் எளிதாக வெப்பத்தை ஈர்க்கும். வெளிப்புற ஆடைகள் முதல் உள்ளாடைகள் வரையில் காட்டன் துணிகளை வெயில் காலத்தில் பயன்படுத்த வேண்டும். இதனால் வெயிலினால் ஏற்படும் தாக்கங்களை குறைக்க முடியும்.
- இந்த காலக்கட்டத்தில் முடி அதிகமாக இருந்தால் வியர்வை கோர்த்து சளி புடிக்க அதிக வாய்ப்புண்டு. ஆண்கள் முடியை ஒட்ட வெட்டிக் கொள்வது போல, பெண்களும் லூஸ் ஹேர் ஸ்டைலை தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பயன்படுத்தலாம்.
- வெயில் காலத்தில் செயற்கையான இனிப்புகள் கலந்த பானங்களைக் காட்டிலும் இயற்கையான பானங்களை எடுத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக இளநீர், நுங்கு, தர்பூசணி, முலாம்பழம் போன்ற இயற்கையான பானங்கள் மற்றும் ஜூஸ் வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
- வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து அவ்வபோது குறையத் தொடங்கும் என்பதால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல் வெயில் நேரத்தில் காஃபி, டீ போன்ற பானங்களை தவிர்த்து விடுவது நல்லது.
- : வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் சமயங்களில் முடிந்தவரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. அதேபோல் வாகனங்களில் செல்லும்போது சரும பாதுகாப்பு கருதி சன்ஸ்கிரீன் புராடக்ட்களை பயன்படுத்தலாம்.