சர்க்கரை அளவை கட்டுக்குள் வச்சிக்கணுமா? தினமும் எடுக்க வேண்டிய உணவு முறை இதோ

health tips sugar patients
By Anupriyamkumaresan Aug 22, 2021 09:46 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in உணவு
Report

சர்க்கரை நோய் வந்தாலே வாயை கட்டிதான் ஆகவேண்டும் என்று பலரும் நினைத்துவிடுகிறார்கள். ஆனால் அப்படி அல்ல. சர்க்கரை நோய் வந்துவிட்டால் உப்பு, சர்க்கரை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். ருசியான உணவுகளை கண்களால் மட்டுமே பார்க்கவேண்டும் என்று நினைத்துகொள்கிறார்கள். 

சர்க்கரை அளவை கட்டுக்குள் வச்சிக்கணுமா? தினமும் எடுக்க வேண்டிய உணவு முறை இதோ | Health Tips For Sugarpatients

ஆனால் அது அப்படி அல்ல. சர்க்கரை நோய் உறுதியான பிறகு அதை முதலில் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகும் தொடர்ந்து சில முக்கிய விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். வாழ்நாள் முழுக்க இதை சரியாக தொடர்ந்தால் நீங்களும் மற்றவர்களை போன்று மகிழ்ச்சியாக உணவை ருசிக்கலாம்.

உடற்பயிற்சியும் சமச்சீரான உணவு முறையும் என உங்கள் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டாலே போதும். உணவு முறையில் என்ன மாதிரியான உணவை அன்றாடம் எடுத்துகொள்ள வேண்டும் என்று ஒரு பார்வை பார்க்கலாம்.

சர்க்கரை அளவை கட்டுக்குள் வச்சிக்கணுமா? தினமும் எடுக்க வேண்டிய உணவு முறை இதோ | Health Tips For Sugarpatients

​காலையில் எழுந்ததும்:

6. 00 மணிக்கு - ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை பொறுமையாக காபி போன்று குடிக்கவும்.

6.30 மணி அளவில் - கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஒரு டம்ளர் அல்லது லெமன் டீ குடிக்கலாம்.

8.30 மணிக்கு - இட்லி - 3 (சிறிய அளவு )

பாசிப்பருப்பு சாம்பார் ஒரு சிறிய கிண்ணம் எடுத்துகொள்ளலாம்

சிறிய வெங்காயம் சேர்த்த எண்ணெய் குறைத்த ஊத்தாப்பம் - 2 (சிறிய அளவு)

கறிவேப்பிலை துவையல் - 4 டீஸ்பூன் அளவு (அல்லது)

சப்பாத்தி -2, சென்னா கடலை கிரேவி - 3 தேக்கரண்டி (அல்லது)

பொங்கல் - வரகு அரிசியில் செய்தது -1 சிறிய கப்

இவற்றில் ஒன்று எடுத்துகொள்ள வேண்டும். உடன் ஒரு சிறிய ஆப்பிள் அல்லது கொய்யா சேர்த்துகொள்ளலாம். வாரத்தில் இரண்டு நாள் முட்டையை வேகவைத்து வெள்ளைகருவை சாப்பிடலாம்.

11.00 மணி அளவில் காய்கறி சூப் அல்லது காய்கறி சாலட் - 1 கப். 

சர்க்கரை அளவை கட்டுக்குள் வச்சிக்கணுமா? தினமும் எடுக்க வேண்டிய உணவு முறை இதோ | Health Tips For Sugarpatients

​மதிய உணவு:

1. 00 மணி அளவில் - சாதம் - 1 கப் 200 கிராம் அளவு பருப்பு, காய்கறிகள் நிறைந்த சாம்பார் - 1 கப் கீரை பொரியல், அல்லது பாசிப்பருப்பு சேர்த்த கூட்டு - 1 கப்

ஆவியில் வேகவைத்த காய்கறிகள் - 1 கப், அசைவம் சாப்பிடுபவர்கள் மீன் குழம்பு - 1 கப், ( 2 மீன் துண்டுகளோடு ) மட்டன், கோழி குழம்பும் இதே அளவு.

கொழுப்பு இல்லாமல் இருக்க வேண்டும். வறுவலும் கூடாது (அல்லது) கேழ்வரகு களி- ஒரு கையளவு உருண்டை குழம்பு - 1 கப் (கீரை, முருங்கைக்கீரை புளி மசியல், பருப்பு துவையல்)

சாதம் - கால் கப், மோர் - 1 டம்ளர் (அல்லது)

சப்பாத்தி - 2 , பாசிப்பருப்பு கூட்டு - 1 கப்,

வெங்காயம் தயிர் சேர்த்த பச்சடி - 1 சிறிய கப்,

சாதம் - அரைகப், ரசம் (அல்லது) மோர் - தேவைக்கு

​மாலை சிற்றுண்டி:

மாலை 4 - மணி அளவில் பாசிப்பருப்பு சுண்டல் - 1 சிறு கப் உடன் கொழுப்பு நீக்கப்பட்ட பால் - 1 டம்ளர் (அல்லது ) பேரிக்காய், ஆப்பிள், பழச்சாலட், பாதாம் பருப்பு - ஏதேனும் 1 கப் உடன் கொழுப்பு நீக்கப்பட்ட பால் - 1 டம்ளர்

சர்க்கரை அளவை கட்டுக்குள் வச்சிக்கணுமா? தினமும் எடுக்க வேண்டிய உணவு முறை இதோ | Health Tips For Sugarpatients

​இரவு உணவு :

இரவு 8 மணி அளவில் எண்ணெய் இடாத சப்பாத்தி - 2 பாசிப்பருப்பு அல்லது சென்னா சுண்டல் கிரேவி, வெங்காயம் தயிர் ரைத்தா - சிறிய கப் (அல்லது)

சிறுதானிய தோசை / கேழ்வரகு அடை / கோதுமை தோசை காய்கறிகள் சேர்த்தது - 2 தொட்டுக்கொள்ள கொத்துமல்லி, புதினா சட்னி. (அல்லது) நவதானிய உப்புமா - 1 கப் தொட்டுக்கொள்ள புதினா சட்னி

இரவு 9.00 மணி அளவில் வெது வெதுப்பான சூட்டில் ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் - ஒரு டம்ளர், உடன் ஆப்பிள் (தேவைப்பட்டால்)