நீங்கள் சர்க்கரை நோயாளியா? இதோ ஒரு நாள் நீர் உண்ணாவிரதம் இருக்கலாமே.. அவ்வளவு நன்மைகளாம்!
உண்ணாவிரதம் என்பது உடல், மனம் மற்றும் ஆன்மாவை புத்துயிர் செய்ய உதவும் பழைய செயல் முறையாகும். உண்ணாவிரதத்தில் நீர் உண்ணாவிரதம் என்பது ஒரு வகையான உண்ணாவிரதம்.
இதில் நீங்கள் நீரை மட்டும் குடிப்பீர்கள். இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. மேலும் எடை இழப்புக்கும் உதவுகிறது.
பொதுவாக நீர் உண்ணாவிரதம் என்பது 24 முதல் 72 மணி நேரம் வரை நீடிக்கும். நீங்கள் கால அளவை மேலும் நீட்டிக்க விரும்பினால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும் உடலை புதுப்பிப்பதற்கும் உண்ணாவிரதம் சிறந்த வழியாகும். ஆனால் 72 மணி நேரத்துக்கும் மேல் மூன்று நாட்களுக்கு மேல் நீர் விரதம் இருப்பது ஆரோக்கியமானதல்ல.
குறுகிய கால விரதம் உடல் சேதமடைந்த உயிரணுக்களை சுத்தம் செய்து புதிதாக மாற்றுகிறது. எனினும் நீடித்த உண்ணாவிரதம் பல உடல்நல அபாயங்களை உண்டாக்கி ஆபத்தை ஏற்படுத்துகிறது.
நீர் உண்ணாவிரதம் யாரெல்லாம் இருக்கலாம் - தவிர்க்கலாம்?
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்கள், அதிக எடையை கொண்டிருப்பவர்கள். மருத்துவரின் மேற்பார்வையில் உண்ணாவிரதத்தை மேற்கொள்பவர்கள் இந்த நீர் உண்ணாவிரதம் செய்யலாம்.
மருத்துவர் உண்ணாவிரதத்தை மருத்துவர் பரிந்துரைக்கவில்லை எனில் நீங்கள் தவிர்க்க வேண்டும்.
இரத்தச் சர்க்கரை குறைவாக இருப்பவர்கள், நீரிழிவு கொண்டிருப்பவர்கள். மருந்து எடுத்துகொள்பவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள், கர்ப்பிணிகள்,
இளந்தாய்மார்கள் இதை தவிர்க்க வேண்டும்.
நீர் உண்ணாவிரதத்தின் நன்மைகள்:
தன்னியக்கத்தை ஊக்குவிக்கிறது:
தன்னியக்கவியல் என்பது உயிரணு சிதைவு அல்லது கூறுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் கழிவுகளை செயலிழக்க செய்யும், அல்லது உடலுக்கு தேவையில்லாத கூறுகளை அகற்றும் உடலின் செயல்முறையாகும். இதன் அடிப்படையில் உங்கள் உடலுக்கான தூய்மைப்படுத்தும் செயல்முறையாகும்.
இரத்த அழுத்தத்தை குறைக்கிறது:
அதிக தண்ணீர் குடிப்பதும், உப்பு நுகர்வு குறைப்பதும் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான வழியாகும். மருத்துவ ரீதியாக மேற்பார்வையிடப்பட்டால் நீண்ட கால
உண்ணாவிரதம் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும்.
இதய நோய்களின் அபாயம் குறைகிறது:
இடைப்பட்ட நேரத்தில் கடைப்பிடிக்கும் நீர் உண்ணாவிரதமானது கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை குறைக்க உதவும். இருப்பினும் இதை ஆதரிக்க வரையறுக்கப்பட்ட ஆய்வுகள் உள்ளன.
இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது:
இன்சுலின் மற்றும் லெப்ட்ன் ஆகியவை உடலில் இரத்த குளுக்கோற் அளவையும் பசியையும் கட்டுப்படுத்த உதவும் ஹார்மொன்கள் ஆகும். உண்ணாவிரதம் பொதுவாக இன்சுலின் உணர்திறன் மற்றும் இரத்த குளுக்கோஸ் சீராக்குகிறது.
ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது:
நீர் உண்ணாவிரதத்தின் மற்றொரு நன்மை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு பழக்கவழக்கங்கள்
காரணமாக எதிர்வினை ஆக்ஸிஜன இனங்கள் குவிவது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் வீக்கத்தையும் அதிகரிக்கிறது.