தினமும் உருளைக்கிழங்கு சாப்பிடுறீங்களா? அப்ப கண்டிப்பா இந்த மாதிரியான பக்கவிளைவுகள் வரும்!
தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு
நாம் அன்றாட உணவு முறையில் உருளைக்கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அது மட்டுமில்லாமல் குறைந்த விலையில் கிடைப்பதால் இதனை நாம் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்கிறோம்.
நம்மில் பலருக்கு உருளைக்கிழங்கில் வெறும் மாவுச்சத்து மட்டும் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் உருளைக்கிழங்கில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
அவை,கார்போஹைட்ரேட்,வைட்டமின் சி,இரும்புச்சத்து,வைட்டமின் பி6,பொட்டாசியம், இரும்புச்சத்து,புரதச்சத்து உள்ளது.இவை உடலுக்கு நன்மை என்றாலும் தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிரச்சனை
மாவுச்சத்துள்ள வேர் காய்கறியை அதிகம் அல்லது தினமும் சாப்பிடுவதும் உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் கலோரிகள் இருப்பதால் எளிதில் எடை அதிகரிக்கும். மாவுச்சத்துள்ள வேர் காய்கறிகள் ஹை-கிளைசெமிக் இன்டெக்ஸை கொண்டுள்ளது.
இதனால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தொடர்ந்து சாப்பிடுவதால் வயிற்று உப்புசம்,வயிற்று மற்றும் வாயுத்தொல்லை,செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் அதிக வெப்பநிலையில் உருளைக்கிழங்கைச் சமைப்பது அக்ரிலாமைடு உருவாக வழிவகுக்கும்