கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள்- மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்!

COVID-19 Chennai
By Swetha Subash May 27, 2022 11:58 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்தாலும் கூட தொடர்ந்து சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸில் ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், காமா, கப்பா என நிறைய உருமாற்றம் நிகழ்ந்துவிட்ட நிலையில் இறுதியாக ஒமைக்ரான் என்ற புதிய வகை தொற்று பரவி உலக நாடுகளை அச்சமடையச் செய்தது.

ஒமைக்ரானிலும் பி ஏ 1, பி ஏ 2 என்று 7 வகை வைரஸ்கள் உலகம் முழுவதும் பரவுவதாக கூறப்பட்டது. தமிழகத்தில் இதுவரை பி ஏ 1 மற்றும் பி ஏ 2 மட்டும்தான் வெளிப்படையாகத் தெரிந்தது. 

இந்நிலையில் கடந்த சில தினன்ங்களுக்கு முன்பு தமிழகத்தில் முதன்முறையாக பி ஏ 4 என்ற புதிய வகை தொற்று கண்டறியப்பட்டது.

கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள்- மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்! | Health Secretary Radhakrishnan Write To Collectors

மேலும், தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்தாலும் கூட தொடர்ந்து சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் குறிப்பிட்ட சில மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதகரித்துள்ளது. அடையாறு, தேனாம்பேட்டை, பெருங்குடி, கோடம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட 5 மண்டலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

ஏற்கெனவே, ஐஐடி வளாகத்தில் கொரோனா பரவல் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திலும் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து குழுவாக கொரோனா பரவல் என்பது இந்த 5 மண்டலங்களில் கண்டறியப்பட்டு வருகிறது.

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்து வருவதால் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.