2017ஆம் ஆண்டை விட டெங்கு பாதிப்பு குறைவுதான் - ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிமாக இல்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொடைக்கானல் நகர் பகுதிகளில் 18 வயது மேற்பட்டோருக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தை பொருத்தவரை டெங்கு பாதிப்பு அதிகம் இல்லை என்றும், உத்திரபிரதேச மாநிலத்தில் டெங்கு பாதிப்பு உள்ளதாகவும் பேசியுள்ளார்.  

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்