‘‘சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை மாற்றாதது திருப்தி அளிக்கிறது’’ - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

covid19 health chennai radhakrishnan tngvt
By Irumporai May 10, 2021 03:44 PM GMT
Report

புதிய அரசு பல்வேறு உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்தாலும், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை மாற்றாதது திருப்தி அளிப்பதாக  சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது

.அதே சமயம் உச்ச நீதிமன்றம் பரிந்துரை அளிக்கும்வரை மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து நீதிபதி புதிதாக ஆட்சியமைத்துள்ள தமிழக அரசு பல்வேறு துறை அதிகாரிகளை மாற்றம் செய்துவருகிறது.

ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு சுகாதாரத்துறை செயலாளரை மாற்றாமல் கொரோனா தடுப்புப்பணிகளை அரசு மேற்கொள்வது  திருப்தி அளிப்பதாக தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு திருப்தி தெரிவித்துள்ளது.