தலைவிரித்தாடும் நிமோனியா; அடுத்தது தமிழகம்தான் - மத்திய அரசு அவசர கடிதம்!

Pneumonia Tamil nadu China
By Sumathi Nov 28, 2023 04:50 AM GMT
Report

மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

நிமோனியா

சீனாவில் குழந்தைகளிடையே நிமோனியா எனும் மர்ம காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், இதன் எதிரொலியாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

pneumonia in china

அதில், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், மருந்துகள், காய்ச்சலுக்கான தடுப்பூசிகள், ஆக்சிஜன், பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளை குறிவைக்கும் சுவாச நோய்; இன்னொரு பெருந்தொற்றா? எச்சரிக்கை!

குழந்தைகளை குறிவைக்கும் சுவாச நோய்; இன்னொரு பெருந்தொற்றா? எச்சரிக்கை!

மத்திய அரசு கடிதம்

தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் நோய் தடுப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். அதன்பின், பொதுசுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

virus fever

கொரோனா தொற்றின் போது கடைபிடிக்கப்பட்ட கண்காணிப்புக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை செயல்படுத்த வேண்டும். குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே, இன்ப்ளூயன்ஸா காய்ச்சல், கடுமையான சுவாச நோய் போன்றவைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும்.

பரிசோதனை மாதிரிகளை, மாநிலங்களில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.