அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்.. வழிவகுக்கும் வகையில் செயல்பட்டால் ரூ.500 அபராதம் - சுகாதாரத்துறை அறிவிப்பு!
டெங்கு காய்ச்சல் பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் செயல்பட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
காய்ச்சல்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த காய்ச்சலுக்கு முக்கிய காரணமான கொசுக்களை ஒழிக்கவும் மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பின்னர், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானால், சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லை என்றால், பொது சுகாதார சட்டம் 1936ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
அபராதம்
இந்நிலையில், காய்ச்சல் உறுதியானது குறித்து சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க தவறிய அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து, கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் நிறுவனங்கள், நில உரிமையாளர்கள், கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
அந்த விதிமீறலின் தனமையை பொறுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு 500 ரூபாய் வரை ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.